März 28, 2025

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி – மஹிந்த….

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி - மஹிந்த....

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட முடியாது. கணிசமான அளவு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் இருந்து அந்த அரசின் மீது தமிழ் மக்கள் மத்தியில் தவறான குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மிகத் துரிதமாக அபிவிருத்தியை முன்னெடுத்தார்.