November 21, 2024

முல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரச அதிபரும்?

முன்னைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த முல்லைதீவு சர்வதேச விளையாட்டரங்கு விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல்  தெரிவத்தாட்சி அலுவலருமான விமலநாதன் மற்றும் சில உயர் அதிகாரிகளும் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரான சமகாலப்பகுதியில் ஆளும் தரப்பிற்கான முகவர்களாக பகிரங்கமாகவே செயற்பட தொடங்கியுள்ளனர்.
தமிழர் சமூக ஜனநாயக்க் கட்சி என்ற பெயரில் நாடாளுமண்றத்தேர்தல்-2020 இல் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சிறீரெலோவுடன் இணைந்து அக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் தவராசா சசிரோகன்(பெரியதம்பி) என்பவரை முன்னிலப்படுத்தி இத்தகைய பிரச்சாரங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதனிடையே முன்னெடுக்கப்படும் அரசியல் பிரச்சாரங்கள் பற்றி புரியாது கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகையோ முல்லையில் மைதானத்திற்கென கரைச்சிக்குடியிருப்பில் 22ஏக்கர் எனத்தலையங்கமிட்டு செய்தி பிரசுரித்துள்ளது.
தமிழர் சமூக ஜனநாயக்கட்சியின்(சிறீரெலோ) நாடாளுமன்றத்தேர்தல் வேட்பாளர் த.சசிரோகனுடன் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நிலஅளவைத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஆகியோர் நெருக்கமாக நிற்கும் புகைப் படத்துடன் இச்செய்தி முற்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
   இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லை அபிவிருத்தி ஒன்றியம் என்ற போர்வையில் சில அரசதிகாரிகளுடன் இணைந்து சிறீரெலோ இயங்கிவருவதாகவும் இவர்கள் அரசாங்க அதிபருடன் இணைந்து கரைச்சிக்குடியிருப்புப் பகுதியில் விளையாட்டுமைதானத்திற்கென பொதுமக்களுக்கு சொந்தமான வயல்க்காணிகள் சின்னாறு எனப்படும் ஆறு கடலோடு கலக்கும் களிமுகப்பகுதி என்பவை உள்ளடங்கலாக 22 ஏக்கர் காணிகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.அத்துடன் இவ்விடத்தில் அறிவித்தல் பலகை ஒன்றை இரவிரவாக நாட்டி உள்ளதாகவும் இப்பகுதிப் பொதுமக்கள் சூழலியல் ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்