November 10, 2024

836 கடற்படையினருககு கொரோனா?

படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 11,709 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இதுவரை வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையைச் சேர்ந்த 836 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 420 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 பேர் நேற்று (04)
இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், 42 பேர் கடற்படையினர் எனவும் ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவரும், பங்பளாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவரும், டுபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1797 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 839 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளதுடன், மேலும் 947 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.