கிளிநொச்சி விசுவமடு துயிலும் இல்லத்தை அபகரிக்க முயற்சி.


இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா அவர்களினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் அவர்களுடன் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர் இதன்போது ஜீவராசா தெரிவிக்கையில் இது ஒரு அரச காணி எனவும் இது எமது மாவீர செல்வங்களை நினைவுகூறும் ஒரு புனித இடம் எனவும் இதில் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அடாத்தாக பிடித்து வைத்து அதில் தோட்டங்களும் கல் உற்பத்தி செய்யும் ஒரு இடமாகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள்.
இவ்விடத்தில் எமது மக்கள் இதனை ஒரு கோயிலாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர் அந்த இடத்தில் இவ்வாறான இராணுவத்தினரின் செயற்பாடுகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது என்றும் இவ்வாறு இருக்கையில் இப்போது வனவள பாதுகாப்பு பிரிவும் அடாவடித்தனமாக எல்லை கல் களை நாட்டி இருக்கிறது இவ்விடயம் தொடர்பாக எமது நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் பிரதமரும் இணைந்து இதற்கு ஒரு தீர்வாக எமது மாவீரர் செல்வங்களை நினைவு கூறும் இந்தப் புனிதமான இடத்தினை இவ்வாறான மன வேதனை அளிக்கும் செயற்பாட்டினை தவிர்க்க வேண்டும் எனவும் மிகவும் கடுமையாக கூறினர்




+2
3

Comment