அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதித்த அமெரிக்கா!
வரும் 16-ந் தேதி முதல் அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் படிப்படியாக விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவிற்கும் பயணிகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடர அமெரிக்கா முன்வைத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு நிராகரித்தது.
இதைதொடர்ந்து, தங்களுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளதால், அந்நாட்டு விமான நிறுவனங்களின் சேவையை வரும் 16ம் தேதி முதல் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டால் முன்கூட்டியே இந்த தடை அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.