போராளிகள் விபரங்களை அறிய முயற்சி!
முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித வன்கூட்டு தொகுதிகள் காணப்பட்ட பகுதியில் நேற்றைய இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது ஞா 0109 இலக்கமுடைய ஆனந்தி என்ற பெண் போராளியின் தடயங்கள் மீட்கப்பட்டுள்ளது.
முகமாலையின் வடக்கே காணப்பட்ட முன்னரண் பகுதியிலே இருந்து உள்ளே காணப்படும் பகுதி பலமான மோதல் இடம்பெற்றதற்கு சான்று பகரும் பகுதி அது. பெண் போராளிகளின் ஆதிக்கத்துக்குள்ளே இந்தப் பகுதி இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதியில்த் தான் நேற்;;றும் வித்துடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது, இதில் ஒரு முழுமையான உடற்பாகங்களுக்கான எச்சங்கள் மீட்கப்பட்டது. இதில் காணப்பட்ட த.வி.பு – ஞா 0644 இலக்கத் தகடு கிடைக்கப் பெற்றது. இவ் வித்துடலில் பச்சை நிறச் சீருடையும் பெண்களுக்கான ஆடைகளும் துண்டு துண்டுகளாக மீட்கப்பட்டது.
அதனோடு அண்டிய பகுதியிலேயே, பெண் போராளிகள் அணியும் இடுப்பு பெல்ட் ஒன்று மீட்க்கப்பட்டது.அப்பெல்ட் பின் புறத்திலேயே த.வி.பு ஞா 0109 ஆனந்தி என எழுதப்பட்டிருந்தது.
இதனிடையே குறித்த இலக்க தகடுகள் ஊடாக பெண் போராளிகளை அடையாளம் காண முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.