März 28, 2025

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது.

முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவ ஆரம்பித்து முதலே மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிருமி நாசினியாக பலர் மஞ்சள் தூளை பயன்படுத்தி வருகின்றமையினால் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பதுளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இரண்டு மாதங்களாக மஞ்சளுக்காக பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது