நாடகம் போடுகின்றனர் சம்பந்தரும் சுமந்திரனும்?
தற்போது ஏதுமற்ற கூட்டமைப்பு தலைவர்கள் எனப்படுவோர் அரச தரப்புடன் பேசப்போவதாக கூறுவது ஒரு நாடகமே.தமிழ் மக்களிடம் உங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் என காண்பித்துக்கொள்ள நடத்தும் நாடகமே அதுவென தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ்பிறேமசந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் மகிந்தவுடனான சந்திப்பினை எதிர்கட்சிகள் புறக்கணித்துவிட தமது நலன்கள் எதற்காகவோ கூட்டமைப்பு சந்திப்பினை நடத்திருந்தால் அதனை ஊடகங்கள் செய்தி என்கின்றன.அதேவேளை கூட்டமைப்பு எம்பிக்கள் கூடி பேசினாலும் அது செய்தி என்கின்றன.சிலவேளை இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் பேசினால் கூட அதுவும் செய்தி என்கின்றன ஊடகங்கள்.
இரா.சம்பந்தனோ அல்லது எம்.ஏ.சுமந்திரனோ இப்போது கதிரையில் இல்லை.அவர்களும் மக்களை போலவே சாதாரணமானவர்கள்.
தேவையாயின் முன்னாள் எமபிக்கள் என சொல்லாம்.
முன்னைய அரசிற்கு முண்டு கொடுத்துக்கொண்டிருந்த போதெல்லாம் பேசாத அவர்கள் இப்போது மகிந்த தரப்புடன் பேச முற்படுவதாக காண்பிக்க பாடுபடுகின்றனர்.
உண்மையில் சிங்கள எதிர்கட்சிகள் சந்திப்பினை புறக்கணிக்க கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு தமக்கிடையே உறவை ஏற்படுத்தி கொள்ளவும் பேசுவதாக மக்களிடையே காண்பிக்கவுமேயல்லாமல் வேறு எதற்குமல்ல என தெரிவித்தார் க.சுரேஸ்பிறேமசந்திரன்.