ஸ்ரீலங்காவுக்கு சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
சீன, ஸ்ரீலங்கா உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென குறிப்பிட்டிருந்தார்.
வெளிவிவகார அமைச்சரின் அக் கருத்தினை மேற்கோள்காட்டி, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Sri Lanka expressed continuity of its support on sovereignty of China its territory and national security in relation to Hong Kong.
All SLs will continue to enjoy usual work & business in HK @ChinaEmbSL
இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.
சீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.
எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.