November 21, 2024

தீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் “இரண்டாம் நிலை வாரிசுகள்” என குறிப்பிடப்பட்டதை ‘நேரடி வாரிசு’ என மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருத்தம் செய்து தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு எடபாடிக்கு பெரும் சிக்கலை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் சொந்த மகள் தான் நான் என்று கூறிக்கொண்டு களம் இறங்கியுள்ள தீபாவை ஒரு அரசியல் கோமாளியாக மாற்றி.

அவரை செல்லாக் காசாக மாற்றவே தமிழ் நாடு அரசு முன்று வந்தது. ஆனால் இந்த அதிரடி தீர்ப்பால் தற்போது அரசு ஆட்டம் கண்டுள்ளது என்கிறார்கள். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை தமிழ் நாடு அரசு செல்ல வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படும் நிலையில். அடுத்த வருடம் ஜனவரி மாதம் அளவில் பரப்பன் அக்ரஹார் சிறையில் இருந்து சசிகலா வெளியே வர உள்ளர். நன் நடத்தை என்று கூறி 30 அல்லது 40 நாட்கள் முன்னதாகவே அவர் வெளியெ வர வாய்ப்புகள் உள்ளது. இது தமிழக அரசியலில் எந்த மாற்றத்தை உண்டாக்கும் என்று தெரியவில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி சசிகலா என்ன தான் சிறை சென்றாலும். அவர் சிறை சென்ற விடையம் தமிழக மக்களிடையே பரிதாபமாக பார்கப்பட்டது. எனவே அவர் மீண்டும் தமிழகம் வரும்போது, அவருக்கு நிச்சயம் ஒரு பெரிய ஆதரவு அலை தோன்றலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும் திண்டாட்டம் ஒன்று காத்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.