November 21, 2024

சமூக ஊடகங்களை முடக்கி விடுவேன்! டொனால்ட் டிரம்ப் மிரட்டில்!

சமூக ஊடகங்களை முடக்கிவிடுவேன் என மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்பின் தவறான பதிவுகளை கீச்சகப் (Twitter) பக்கத்தில் திருத்தப்பட்டதை அடுத்தே டொனால் டிரம்பினர் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்கள் குறித்த நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திடவுள்ளதாய் அவர் மேலும் கூறியுள்ளார்.
தபால் வாக்களிப்பு முறையில் மோசடிகள் இடம்பெறும் எனவும் நம்பகமற்ற ஒன்றாக மாற்றிவிடும் எனவும் பதிவிட்டிருந்தார்.
இப்பதிவுகளை கீச்கச நிர்வாகத்தினர் திருத்தியுள்ளனர்.
எனது அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதாக டிரம்ப் மீண்டும் கீச்சகத்தில் பதிவை மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைவர், தனியார் நிறுவனங்கள், மற்றவர்களின் கருத்துகள் குறித்துத் தீர்ப்பளிப்பது சரியல்ல என்று கருத்துரைத்தார்.
அதற்குப் பதிலளித்த கீச்சகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜக் டோர்சே (Jack Dorsey) தம் நிறுவனத்தின் நிலைப்பாட்டைத் தற்காத்துப் பேசினார்.
தவறான தகவல்களைப் பயனீட்டாளர்களுக்குச் சுட்டிக் காட்டுவதே தங்கள் நோக்கம் என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்தே இந்த விரிசர் எழுந்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கீச்சகத்தில் பக்கத்தின் கணக்கை மூடப்போவதாக அவர் அச்சுறுத்தி இருந்தார்.

டொனால்ட் டிரம்ப் இன்று வியாழக்கிழமை ஒரு ‚சோஷியல் மீடியா‘ நிர்வாகத்தினர் தலையிடுவது குறித்த உத்தரவில் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.