November 21, 2024

ஒரே நாளில் 137?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் நேற்று (26) இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நேற்று 137 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 127 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், 10 பேர் கடற்டையைச் சேர்ந்தவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா நெருக்கடி ஆரம்பித்த நாளிலிருந்து  இதுவரை வெளிநாடுகளில் இருந்து கல்முனைப் பிராந்தியத்துக்குள் வந்த பிராந்தியத்தைச் சேர்ந்த 1, 005  பேரில் சுயதனிமைப்படுத்தலின் பின்னர் 984 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
மேலும்  21பேர் சுயதனிமைப்படுத்தலிலுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
சமகாலத்தில் கல்முனைப் பிராந்திய கொரோனா நிலைவரம் தொடர்பாகக் கூறிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை இருவரே முதல்தர தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒருவர் இரண்டாந்தர தொற்றுக்கு ஆளாகியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் வேறு பிரதேசங்களிலிருந்து கல்முனைப் பிராந்தியத்துக்குள் வந்த 2,282 பேரில் சுயதனிமைப்படுத்தலின் பின்னர் 1,868 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் 414 பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.