November 24, 2024

அமெரிக்க விமானத்தை கதி கலங்க வைத்த ரஷ்ய விமானங்கள்

அமெரிக்க விமானத்தை கதி கலங்க வைத்த ரஷ்ய விமானங்கள்

கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷ்ய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இரண்டு ரஷ்ய சு -35 விமானங்கள் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்வதேச கடல் மீது அமெரிக்கா கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை ட்ரோனை பாதுகாப்பற்ற மற்றும் முறைகேடான முறையில் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மே 26, 2020 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி -8 ஏ ஆளில்லா விமானம் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்வதேச கடல் வழியாக பறந்து கொண்டிருந்தது.

இதன் போது இரண்டு ரஷ்ய சு -35 விமானம் 65 நிமிடங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து முறைகேடான முறையில் தடுத்து நிறுத்தியது.

ரஷ்ய விமானிகள் பி -8 ஏவின் இரு பக்கத்திலும் ஒரே நேரத்தில் நெருக்கமான நிலையில் பறந்ததால், இந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மற்றும் தொழில்சார்ந்ததல்ல என்று தீர்மானிக்கப்பட்டது என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

ரஷ்ய சு -35 விமானிகளின் நடவடிக்கைகள் நல்ல வான்வழி மற்றும் சர்வதேச விமான விதிகளுக்கு முரணானவை என்றும், இரு நாட்டு விமானத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும் என்றும் அமெரிக்க கடற்படை கூறியது.

ரஷ்ய விமானம் சர்வதேச வான்வெளியில் இயங்கிக் கொண்டிருந்தபோது, இந்த இடைமறித்தல் பொறுப்பற்றது.

1972 ஆம் ஆண்டு உயர் கடல்களில் மற்றும் அதற்கு மேல் சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் (INCSEA) உட்பட பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சம்பவங்களைத் தடுப்பதற்கும் அமைக்கப்பட்ட சர்வதேச தரங்களுக்குள் அவை செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.