தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்?
சிறீலங்கா ரெலிகொம் உள் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை அது ஏற்றுக்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்தி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேவைகளை வழங்க பயன்படும் எந்த அமைப்பிற்கும் எந்த பாதிப்பும் இல்லை.
எனவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சேவைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை, மேலும் வாடிக்கையாளர் தகவல்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையெனவும் அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பினை நினைவு கூர்ந்து நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலின் போதே சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.