திருடனை பிடிக்க போகின்றதாம் காவல்துறை?
கிளிநொச்சி பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள இரும்பு பாலத்திலிருந்து திருடப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும்
நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
துருப்பிடிக்காத உயர் தரத்திலான இரும்பு கம்பிகள், தட்டுக்களால் வடிவமைக்கப்பட்ட குறித்த பாலத்தின் பாகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளர்களால் திருடப்பட்டது. திருடப்பட்ட பாகங்களின் பெறுமதி மட்டும் ஏறக்குறைய 15 மில்லியன் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு குற்றத்தடுப்புப்பிரிவினர் ,வீதி அபிவிருத்தி அதிகாரசபைஅதிகாரிகள், பணியாளர்களின் விரைந்த செயற்பாட்டின் பலனாக கனகபுரம் வீதியில் பிரபல இரும்புவியாபாரி ஒருவரின் மறைவிடத்தில் துண்டாக்கப்பட்ட ஒருதொகுதி கேடர்களும் A9 வீதியில் கிளி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த இரும்பு வியாபாரியின் மற்றோர் மறைவிடத்தையும் பணியாளர்கள் கண்டுபிடித்த நிலையில் அங்கும் பல கேடர்கள் தகரங்களால் மறைத்து மூடி வெட்டுவதற்கு தயார்நிலையில் இருந்தன….