மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்?
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது.
நேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்த விவசாயிகளை கடற்படையினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று விவசாய வேலைகளுக்காச் சென்று வீடு திரும்பிக் கொணரடிருந்தோரை வழி மறித்த வடமராட்சி கிழக்கில் உள்ள கடற்ப்படையினர் காரணம் ஏதுவுமே தெரிவிக்காது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வேலைகளை முடித்து விட்டு இரவு ஊரடங்கு அமுலாகும் 8 மணிக்கு முன்னர் வீடுகளுக்குச் செல்வதற்காக உழவியந்திரம் மற்றும் உந்துருளி, துவிச்சக்கர வண்டிகளில் இரவு 07:30 அளவில் பயணித்தவர்களையே கடற்படை தாக்கியுள்ளது.
வுடமராட்சி கிழக்கின் மாமுனை மற்றும் செம்பியன்பற்றுப் பகுதிகளிலேயே கடற்படையினர் காரணமேதுமின்றி பொதுமக்களை தாக்கியுள்ளனர்.
ஏற்கனவே நாகர்கோவிலில் பொதுமக்களது வீடு புகுந்து இராணுவம் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
அதே போன்று இலங்கை காவல்துறை அம்பன் பகுதியில் அண்மையில் நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதே.