சீனாவின் „உலகளாவிய கூட்டுப் படுகொலை“ கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்!
கொரோன வைரஸ் COVID -19 கொடிய நோயால் உலகெங்கும் நேர்ந்துவரும் மரணங்களை இது „உலகளாவிய கூட்டுப் படுகொலை“ என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்ணித்து மீண்டும் சீனாவைச் சாடியிருக்கிறார்.
கிருமிப் பரவலைத் தடுக்கமுடியாத சீனாவின் இயலாமையே இதற்குக் காரணம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதலில் உருவாகிய கொரோன தற்போது உலகம் முழுவதும் பரவி 323,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் அத்தோடு உலகமெங்கும் மிகப் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பையையும் ஏற்ப்படுத்தி வருகிறது.