விக்கினேஸ்வரனுக்கும் தடை! திருப்பி அனுப்பப்பட்டார்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தச் சென்ற முன்னாள் வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பூநகரி சங்குபிட்டியில்
அமைந்துள்ள இராணுவ தடை முகாமில் வழிமறித்து நிகழ்வுக்குச் செல்லவிடாது திருப்பி அனுப்பியுள்ளனர் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்:-
எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மூன்று மகிழுந்துகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றுகொண்டிருந்தபோது, சங்குப்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ தடை முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டோம்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குச் செல்வதானால் உங்களுக்கு மேல் இடத்திலிருந்து அனுமதி வரவேண்டும் என படையினர் கூறி நேரத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் வந்து சேர் நீங்கள் தனிப்பட்ட விடயத்திற்குப் போறது என்றால் அனுமதி வழங்கலாம். நீங்கள் முள்ளிவாய்கால் நிகழ்வுக்கு செல்வதால் அனுமதி வழங்கக்கூடாது என மேலிடத்திலிருந்து கட்டளை வந்துள்ளது என்றனர்.
என்னை ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கு தடுத்து வைத்திருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலுக்கு தொடர்ந்து செல்ல முடியாது என்ற நிலையில் நான் திருப்பிக் கொண்டிருக்கிறேன். நான் திரும்பிச் செல்லும் வழியில் செம்மணியில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தி சுடரேற்ற முடியும். அது தொடர்பில் நாங்கள் பரிசீலிக்கிறோம் என்றா,
இப்படித்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் நடைந்துள்ளது.
ஆகவே தெற்கில் போரில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாக்களை கொண்டாட அனுமதி வழங்கிய அரசாங்கம் எங்களுக்குத் தடை விதிக்கிறது என்றார்.
இதேநேரம் செம்மணியிலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவது தடுக்கப்பட்டது.
பின்னர் சிவாஜிலிங்கத்தால் சுடரேற்றப்பட்டது.