உயிர் கொல்லி வைரஸில் இருந்து மீண்டு வரும் இத்தாலியும் ஸ்பெயினும்
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஊரடங்கை தளர்த்தவுள்ளன.
ஐரோப்பா முழுவதும் தீவிரமாக அதிகரித்த கொரோனா மரணங்கள் தற்பொழுது குறைந்து வருகிறது.
மார்ச் மாதம் முதல் இத்தாலியில் அதிக மரணங்கள் பதிவாகியிருந்தன. இதுவரை இத்தாலியில் 225,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 31,908 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்களாக முடக்கத்திலிருந்த இத்தாலியில், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபானக்கடைகள் திறக்கப்பட உள்ளன.
இதேவேளை, ஸ்பெயினில் மேட்ரிட் மற்றும் பார்சிலோனா தவிர்ந்த ஏனைய நகரங்களில் கட்டுப்பாடு தளர்கிறது.
அங்கு 10 நபர்கள் கொண்ட குழுக்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சந்தித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.