இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம்..!!
இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.
கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.
இந்த வழிகாட்டல்களின் அடிப்படையில் மாகாண மட்ட கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அத்துடன், நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாடு பின்வரும் 04 கட்டங்களில் இடம்பெறவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டம்-01
மாகாண மட்ட நிறுவனங்களுடன் இணைந்து பெற்றோரின் பங்களிப்புடன் பாடசாலைகளில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதன் பின்னர் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி நான்கு நாட்கள் பாடசாலை மூடி வைக்கப்படும்.
கட்டம்-02
கல்விசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.
கட்டம்-03
உயர்தர மாணவர்கள் மற்றும் சாதாரண தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.
கட்டம்-04
சிறுவர்கள் பாடசாலைக்கு வர வேண்டும்.
இருப்பினும் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.