தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து செல்ல மறுத்த சிறுவன்..!! காரணம் என்ன ??
முழங்காவில் 651வது படைப்பிரிவு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 60பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கிளிநொச்சி முழங்காவில் 651வது படைப்பிரிவின் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்த, வாழைத்தோட்டம், மீதொட்டமுல்ல, வெல்லம்பிட்டிய,கொட்டேகன போன்ற பகுதியைச்சேர்ந்த 60பேர் இன்று (15) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
651வது இராணுவ முகாமின் இராணுவ அதிகாரி பிரிகேடியர் சி.என்.வரககொட தலைமையில் நடைபெற்றது. குறித்த 60 பேருக்கும் PCR பரிசோதனை நிறைவில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பு மருத்துவ சான்றிதழ்கள் வழங்கி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 60 பேரும் நான்கு இராணுவ பேரூந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த 60பேரில் 22ஆண்களும் 38பெண்களும் அடங்குகின்றனர்
இதன்போது சிறுவன் ஒருவன் தனிமைப்படுத்தல் முடித்து வீடு திரும்பும் வேளையில் தனிமைப்படுத்தல் முகாமில் பணியாற்றிய படைவீரர்களை விட்டு விலக முடியாமல் கதறி அழுததை அங்கிருக்கும் படைவீரர்கள் படை அதிகாரிகள் தனிமைப் படுத்துதலுக்கு வந்திருந்த நபர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தனிமைப்படுத்தல் நிறைவு செய்த நபர் ஒருவர் படையணியின் இராணுவ அதிகாரியின் உருவத்தை வரைந்து அதிகாரி ஒருவருவருக்கு நினைவாக வழங்கி வைத்தார்.