மாலைதீவில் இலங்கையர் ஐவருக்கு கொரோனா?
கோவிட் -19 விதித்த பயணத் தடையின் விளைவாக மாலைதீவில் பல இலங்கையர்கள் சிக்கியுள்ளனர், எனவே தாம் தாயகம் திரும்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் வழிவகை செய்யவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலைதீவு விமான நிலையத்திலிருந்து இன்று 288 இலங்கையர்களை விமானத்தில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், பல்வேறு வேலைகளுக்காக மாலைதீவுக்குச் சென்ற இலங்கையர்கள் மூன்று மாதங்களாக சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் 500,000 மக்கள் தொகை கொண்ட மாலைதீவில், 955 பேர் ஏற்கனவே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து இலங்கையர்கள் தற்போது மாலைதீவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகரின் 6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 150,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு கொரோனாவின் ஆபத்து அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “மாலைதீவுக்கு விமானத்தை திருப்பி அனுப்புவது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இறுதி முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படும்” என்றார்.