November 21, 2024

கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு காரணம் சீனா தான்!

கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு காரணம் சீனா தான்!

கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் காட்டமாகத் தெரிவித்துள்ள செய்தியில், கொரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாதான் காரணம். இதனால் உலகம் முழுதும் 250000 பேர் இறந்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் எழுச்சியுடன், இனியும் சீனாவின் செயலுக்கு பொறுப்பாக மாட்டோம் என்று தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.

கொரோனா பரிசோதனை கூடங்களில் இருந்து பரவியிருந்தாலும், விலங்குகள் சந்தையில் இருந்து பரப்பப்பட்டாலும் இது நல்லது அல்ல.

கொரோனா வுஹானிலிருந்து தான் பரவியது, எங்களிடம் இதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன.

சீனாவில் இருந்து கடந்த 20ஆண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளது. அவை, சார்ஸ், ஏவியன் ஃபுளூ, ஸ்வைன் ஃப்ளூ, கோவிட்-19 என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்று சீனா நோய்களை கட்டவிழ்த்துவிட்டால் இதை எத்தனை நாட்கள் நாம் பொறுத்துக்கொள்ள முடியும்.

இதை நிச்சயம் நிறுத்திக்கொள்ள வேண்டும். சீனாவுக்கு நாங்கள் உதவிகரம் நீட்டினோம். ஆனால், அவர்கள் அதை மறுத்துவிட்டனர்.

சீனா பொதுசுகாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். சீனாவில் இருந்து இதுபோன்று இன்னொரு கொள்ளை நோயை உலகம் தாங்காது. இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆபத்தாக உள்ளது.