November 24, 2024

கொரோனா விசாரணை கோரிய ஆஸ்திரேலியாவுக்கு சீனா பதிலடி!

சீனாவில் கொரோனா தொற்று நோய் தொடக்க நிலைப் பரவல் குறித்து விசாரணை தேவை என ஆஸ்திரேலியா கூறியதை அடுத்து. அதற்குப்
பதிலடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டு இறைச்சிகள் நிறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் 4 முக்கிய மாட்டடு இறைச்சி விநியோகிப்பாளர்களிடம் இறக்குமதியை செய்து வந்தது சீனா.

ஆஸ்திரேலியாவின் அழைப்பை அடுத்து ஆஸ்திரேலியப் பொருள்களைப் புறக்கணிக்கப்போவதாக பெய்ச்சிங் தூதர் எச்சரிக்கை விடுத்த சில வாரங்களில், சீனாவின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சீனாவின் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப இறைச்சி இறக்குமதி இல்லை என்பதால் அது நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

வர்த்தகங்கள் வழக்கம்போல் தொடர, இரு நாடுகளின் அதிகாரிகளும் பேசவிருப்பதாக ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிடையே வர்த்தகப் பூசல் ஏற்பட்டால் ஏனைய துறைகளும் பாதிக்கப்படக்கூடும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மாட்டிறைச்சியில் 35 விழுக்காடு சீனாவுக்கு ஏற்றுமதியாகின்றது. இதன் மூலம் 1.7 பில்லியன் டொலர்கள் வருமானம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்கிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.