சம்பந்தனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதில் ஆச்சரியம் இல்லை……
தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்ததொரு திருப்பம் அமைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்சங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில்அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின்ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என, எம்.ஏ சுமந்திரன் சிங்கள மொழிமூலமான ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அரசியல்வாதிகளும், அவரதுகருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையிலேயே,தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்சங்கரி இவ்வாறு கருத்துக்களைமுன்வைத்திருந்தார்.
இதேவேளை, தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் பல்வேறு துரோகங்களை செய்துள்ளதாகவும், அவருக்குநூறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்சங்கரி இதன்போது குறிப்பிட்டார்.