நீதிமன்றிற்கு வரமாட்டாராம் சட்டமா அதிபர்?
சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் தப்புல
டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கே இவ்வாறு ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை, கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான நிலையை கருத்திற்கொண்டு ஜூன் 20 அன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும், இவ்வாறு அறிவிக்கப்பட்ட திகதிக்கு அரசியமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் கட்டுப்பாட்டில் இல்லாததால் தேர்தலை நடத்த உகந்த சூழல் நாட்டில் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.