நடுக்கடலில் சொந்த போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்..! நடந்த விபரீதம்!
ஓமான் வளைகுடாவில் கடற்படைப் பயிற்சியின் போது இராணுவக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில் ஈரானிய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமான் வளைகுடா என்பது ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் குறிப்பாக மிகவும் முக்கியம் வாய்ந்த நீர்வழிப்பாதையாகும். இது வளைகுடாவோடு இணைவதால் இந்த வழியாக உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஈரானிய கடற்படை பயிற்சிகளின் போது ஓமான் வளைகுடாவில் உள்ள ஈரானின் தெற்கு ஜாஸ்க் துறைமுகத்தின் சுற்றளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஈரானிய கடற்படையை மேற்கோள் காட்டி குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உள்ளுர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
ஈரானின் ஆயுதப்படைகள் இப்பகுதியில் தொடர்ந்து பயிற்சிகளை நடத்துகின்றன.
2018 ஆம் ஆண்டில் கடற்படைக் கடற்படையில் இணைந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பலான கொனாரக் என்ற கப்பல் மீது ஏவுகணை தாக்கியதாக உள்ளுர் ஊடகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் சூழ்நிலைகள் தற்போது தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கப்பல் பயிற்சியின் போது மற்றொரு கப்பல் தற்செயலாக கொனாரக் மீது ஏவுகணையை ஏவியதாக கூறப்படுகிறது.
ஈரானின் மௌட்ஜ்-வகுப்பு போர் கப்பல் ஜமரன் தற்செயலாக கொனாரக் கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.