கொரோனா மருந்தை கண்டுபிடித்து உயிரிழந்த தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்!
சென்னையில் கொரோனா மருந்தை கண்டுபிடித்ததோடு அதை குடித்துவிட்டு உயிரிழந்த தமிழர் சம்பவத்தில் புதிய திருப்பமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தின் மேலாளரான சிவநேசனும், மருத்துவர் ராஜ்குமாரும் நண்பர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சிவநேசன் தான் அதை குடித்ததோடு மருத்துவர் ராஜ்குமாருக்கும் கொடுத்தார்.
அதாவது கொரோனா வைரஸுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க சோடியம் நைட்ரேட்டைக், ஹைட்ரிக் ஆக்ஸைடு என சோடியம் நைட்ரேட் கரிசலை சிவநேசன் தயாரித்துள்ளார். பின்னர் அதைச் சாப்பிட்டால் கொரோனா தொற்று குணமாகிவிடும் என நம்பிக்கையுடன் இருவரும் குடித்தனர்.
குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிவநேசன் உயிரிழந்த நிலையில், ராஜ்குமார் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சூழலில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உயிரிழந்ததால், அவருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த சிவநேசனுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் சிவநேசன் வேண்டுமென்றே கொரோனா வைரசை உடலில் செலுத்திக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிவனேசனுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர் ராஜ்குமாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலும் அனுமதியின்றி மருந்து தயாரித்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணையும் துவங்கப்பட்டுள்ளது.