வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்…?
அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப் பதற்றமே விலகவில்லை. அடுத்து என்ன படிப்பது, கல்லூரிகளை எப்படித் தேர்வு செய்வது என்று பல குழப்பங்கள்… பதற்றங்கள். கொரோனாவால் நாடே முடங்கியிருக்கிறது. இந்தச்சூழலில் இந்தக் குழப்பங்களை எப்படித் தீர்த்துக்கொள்வது?
ஆனந்த விகடன் அதற்காக செய்திருக்கிற ஏற்பாடுதான், `டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ‘. இந்தக் கண்காட்சியை ஒட்டி பிரபல கல்வியாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்கும் வெபினாரையும் ஏற்பாடு செய்திருக்கிறது ஆனந்த விகடன்.
மே 9 மற்றும் 10-ம் தேதி நடக்கவுள்ள இந்த வெபினாரில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்று கல்வியாளர்களோடும் தன்னம்பிக்கை பேச்சாளர்களோடும் உரையாடலாம். மே 10-ம் தேதி, `பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்‘ என்ற தலைப்பில் `பட்டிமன்றம்‘ ராஜா மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் உரையாடுகிறார். மாணவப் பருவத்தில் குடும்பத்தைப் பற்றியோ, தேசத்தைப் பற்றியோ, பெரிய அளவிலான யோசனைகள் நம்மிடம் இருக்காது.