November 21, 2024

கொரோன உருவாகிய வுஹானில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸின் உற்பத்தி மையமான சீன நகரமான வுஹானில் 120 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட 60,000 உயர்நிலைப் பள்ளி மூத்த மாணவர்களுக்கு வுஹான் நகரம் மற்றும் சுற்றியுள்ள ஹூபே மாகாணத்தில் வாழ்க்கையை படிப்படியாக வளமையாக்கும் திட்டத்தில் புதன்கிழமை பாடசாலைகள் திறக்கப்பட்டு மாணவர்களும் ஆர்வத்தோடு சென்றுள்ளமை குறிப்பிடத்தகது.

எனினும் பல பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகள், மற்றும் இளைய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இன்னும் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகவேண்டிய வகுப்பு மாணவர்களுக்கே முன்னுரிமையளித்து திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.