வாரந்தம் 2.5 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் அவுஸ்திரேலியா!
கொரோன பரவலை தடுப்பதற்கு ஆஸ்திரேலியாவில் நடமுறையில் இருக்கும் சமூக முடக்கநிலையால் வாரந்தோறும் 2.5 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டத்திற்கும் ஒன்றுகூடல்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையால் பொருளாதாரம் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலிய அரசாங்க ஊழியர்களின் நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அதிகாரியான திரு. ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் (Josh Frydenberg) தெரிவித்துள்ளார்.