மகிந்த தேனீர் விருந்தில் மூக்குடைபட்ட கூட்டமைப்பு?
மகிந்தவின் இறுதி நேர தேனீர் விருந்திற்கு சென்றிருந்த கூட்டமைப்பு மூக்குடைபட்டு திரும்பும் அவலத்திற்குள்ளாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(4) மாலை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச,பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேனீர் விருந்தின் போது சி.சிறீதரன் சிலஅ கோரிக்கைகளினை முன்வைக்க பஸில் ராஜபக்ச நையாண்டி செய்து அதனை பற்றி தனது சகபாடிகளுடன் சிரித்துக்கொண்டார்.
ஊடகங்களிற்கு அறிக்கை விட ஏதுவாக தமது கோரிக்கைகளை ஆளாளுக்கு அடுக்கிய போதும் அதிகாரமில்லாதவர்கள் பற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லையென பஸில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனா வைரஸக்கு எதிராக சிறிலங்காவில் உள்ள அனைவரும் அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என, விழுந்தாலும் மீசையில் மண்படாத கதையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு நேற்று (04) மாலை கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.