கொரோனாவால் இத்தனை ஆயிரம் கோடி சினிமாவில் நஷ்டம்!
கொரோனாவால் இந்தியாவில் 39 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1303. கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சினிமா தொழிலும் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலி பணியாளர்கள் பலர் வேலையை இழந்து வறுமையால் வாடுகின்றனர்.
சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தாராளமாக நிதி அளித்து உதவினர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் 1000 கோடியும், ஹிந்தி சினிமாவில் 5 ஆயிரம் கோடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளார் டகுபதி சுரேஷ் கூறியுள்ளார்.
தெலுங்கில் ரிலீஸ்க்கு தயாராகவுள்ள 15 படங்கள் மற்றும் தயாரிப்பில் இருக்கும் 70 படங்கள் முடங்கியுள்ளதாம். 1800 தியேட்டர்கள் மூடபப்பட்டுள்ளன. 18 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதார்கள் என அவர் கூறியுள்ளார்.