வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! சவேந்திர சில்வா
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள் ஹொட்டல்களிற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்களே நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று பிரித்தானியாவிலிருந்து 260 பேர் இலங்கை திரும்பவுள்ள அவர்கள் நிலையில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ஹொட்டல் உரிமையாளர்கள் தமது ஹொட்டல்களை தனிமைப்படுத்தல் மையங்களாக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
அத்துடன் ஹொட்டல் உரிமையாளர்கள் இதை இலாப நோக்கத்துடன் செயற்படுத்தவில்லையென்றும் தெரிவித்தார்.
ஹொட்டலில் உணவு மற்றும் தேநீர் உட்பட ஒரு நாளைக்கு 7500 ரூபா வசூலிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
வழக்கமாக ஒரு ஹொட்டலில் ஒரு அறை சுற்றுலா பயணிகளுக்கு 20,000 – 35,000 ரூபா வரை வசூலித்த நிலையில், தனிமைப்படுத்தல் திட்டத்திற்காக குறைந்த கட்டணம் அறவிடப்படுகிறதாகவும் இராணுவத்தளபதி மேலும் கூறினார்.
தனிமைப்படுத்தல் திட்டத்திற்கு இணக்கம் தெரிவிப்பவர்கள் மட்டுமே நாடு திரும்ப முடியும் என்றும், ஹொட்டல் தனிமைப்படுத்தல் திட்டங்களை இராணுவம் மேற்பார்வை செய்யும் என்றும் தெரிவித்தார்.