Mai 3, 2024

கொரோனாவுக்கு சிகிற்சை அளிக்க ரெமெடிசிவரை அங்கீகரித்தது அமெரிக்கா!

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எபோலா மருந்து ரெமெடிசிவரை அவசரமாக
பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு ரெமெடிசிவரை செலுத்தியதால் அவர்கள் குணமடைந்துள்ளனர்.  குறித்த மருந்தால் வைரஸ் உயிர்வாழ்வது கணிசமான அளவு மேம்படவில்லை.

இருந்தாலும் எபோலாவுக்கு உருவாக்கப்பட்டதால் இம்மருந்தை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது கலிபோர்னியாவில் உள்ள கிலியட் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு ஒரு „மேஜிக் புல்லட்“ என்று  இந்த மருந்தைப் பார்க்கக்கூடாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பின் போது, ​​கிலியட் தலைமை நிர்வாகி டேனியல் ஓ’டே, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாகும். கிலியட் நிறுவனம் 1.5 மில்லியன் குப்பிகளை நன்கொடையாக அளிக்கும் என்றார்.

இது கொவிட்-19 க்கான முதல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாகும். எனவே அதன் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையாளர் ஸ்டீபன் ஹான் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசர அங்கீகாரம் ஒரு முறையான ஒப்புதலுக்கு சமமானதல்ல, இதற்கு உயர் மட்ட மதிப்பாய்வு தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.