November 24, 2024

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்காக ஒன்பது மணித்தியாலங்களில் 3.18 மில்லியன் விண்ணப்பங்கள் குவிந்தன!!

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் இணையம், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகியது. இன்று காலை கனேடியர்களுக்கு உரையாற்றிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, நான்கு மணி நேரத்தினுள் 240,000 க்கும் அதிகமான கனேடியர்கள் இந்தக் கொடுப்பனவுக்காக வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக அறிவித்தார். ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் பிறந்தவர்கள் இன்று விண்ணப்பிக்கக் கூடியதாகவும், ஏனைய மாதங்களில் பிறந்தோர் வாரத்தின் ஏனைய நாட்களிலும் விண்ணப்பிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

கனேடியர்களில் சில மில்லியன் பேருக்கு CERB கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இந்த வாரத்தில் ஆரம்பமாகினாலும், மேலும் பலர் இதற்குத் தகுதி பெற மாட்டார்களெனப் பிரதம மந்திரி ஏற்றுக் கொண்டுள்ளார். பணிநேரம் குறைக்கப்பட்டுள்ள பணியாளர்கள், வேலையில் தொடர்ந்தாலும் CERB கொடுப்பனவை விடக் குறைந்த பணத்தைப் பெறும் அத்தியாவசிய பணியாளர்கள், கோடை கால வேலைவாய்ப்புக் குறித்துக் கவலை கொண்டிருக்கும் உயர் கல்வி மாணவர்கள் ஆகியோருக்கு விரைவில் மேலதிக உதவிகள் குறித்து அறிவிக்கப்படுமென அவர் உறுதியளித்தார்.

75 சதவீத கனடா அவசரகால சம்பள மானியத்தை முன்னெடுப்பதற்கான சட்டமூலத்தை அரசு தயாரித்து வருகிறதெனவும், நாடாளுமன்றத்தை இயலுமான விரைவில் மீளவும் கூட்டுவதற்கு ஏனைய கட்சிகளைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதம மந்திரி அறிவித்தார்.

கோவிட்-19 நெருக்கடியால் நிதிப் பிரச்சினையை எதிர்கொள்ளும் கனேடியர்களுக்கு உதவியாக, கடன் அட்டைகளின் வட்டிவீதங்களை ஏறத்தாழ அரைப்பங்காகக் குறைப்பதற்கு ஆறு பிரதான வங்கிகளுடனும், சில கூட்டுறவு வங்கிகளுடனும் (credit union) மத்திய அரசு இணக்கம் கண்டுள்ளது. இந்த இணக்கங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய நிதியமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிடுவார்.

கனேடிய வணிக சம்மேளனம், கனேடிய அரசுடன் இணைந்து ஆரம்பித்துள்ள Canadian Business Resilience Network என்ற புதிய முயற்சியையும் பிரதம மந்திரி ட்ரூடோ நினைவுபடுத்தினார். இந்தக் கடுமையான காலத்தைச் சமாளிப்பதற்கும், நெருக்கடி முடிவடைந்ததும் பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கும் இந்த முயற்சி அனைத்து அளவுகளையும் உடைய வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்கும்.

அனைத்துக் கனேடியர்களும் அவர்களது அன்புக்குரியோரையும், முன்வரிசைப் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பிரதம மந்திரி மீண்டும் கேட்டுக் கொண்டார். 16 பேர் மரணமான ஹம்போல்ட் புறொங்கோஸ் (Humboldt Broncos) வாகன விபத்தின் இரண்டாவது ஆண்டை நினைவுகூர்ந்த அவர், கனேடியர்கள் மாறும் நிலைமைகளை எதிர்கொள்ளக் கூடியோரெனவும், பலமானவர்களெனவும், இருள் சூழ்ந்த நிலையில் இருந்து மீள்வதற்கு ஒற்றுமையாக இருப்பார்களெனவும் நினைவுபடுத்தினார்.

செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய வருவாய்த்துறை அமைச்சர் டியானே லெபோதிலளிர் (Diane Lebouthillier) இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமான கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களுக்கு பிற்பகல் 3 மணிவரையில் 3.18 மில்லியன் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள், சராசரியாக நிமிடத்திற்கு 1,000 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.கனேடியர்களில் சில மில்லியன் பேருக்கு CERB கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இந்த வாரத்தில் ஆரம்பமாகினாலும், மேலும் பலர் இதற்குத் தகுதி பெற மாட்டார்களெனப் பிரதம மந்திரி ஏற்றுக் கொண்டுள்ளார். பணிநேரம் குறைக்கப்பட்டுள்ள பணியாளர்கள், வேலையில் தொடர்ந்தாலும் CERB கொடுப்பனவை விடக் குறைந்த பணத்தைப் பெறும் அத்தியாவசிய பணியாளர்கள், கோடை கால வேலைவாய்ப்புக் குறித்துக் கவலை கொண்டிருக்கும் உயர் கல்வி மாணவர்கள் ஆகியோருக்கு விரைவில் மேலதிக உதவிகள் குறித்து அறிவிக்கப்படுமென அவர் உறுதியளித்தார்.

75 சதவீத கனடா அவசரகால சம்பள மானியத்தை முன்னெடுப்பதற்கான சட்டமூலத்தை அரசு தயாரித்து வருகிறதெனவும், நாடாளுமன்றத்தை இயலுமான விரைவில் மீளவும் கூட்டுவதற்கு ஏனைய கட்சிகளைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதம மந்திரி அறிவித்தார்.

கோவிட்-19 நெருக்கடியால் நிதிப் பிரச்சினையை எதிர்கொள்ளும் கனேடியர்களுக்கு உதவியாக, கடன் அட்டைகளின் வட்டிவீதங்களை ஏறத்தாழ அரைப்பங்காகக் குறைப்பதற்கு ஆறு பிரதான வங்கிகளுடனும், சில கூட்டுறவு வங்கிகளுடனும் (credit union) மத்திய அரசு இணக்கம் கண்டுள்ளது. இந்த இணக்கங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய நிதியமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிடுவார்.

கனேடிய வணிக சம்மேளனம், கனேடிய அரசுடன் இணைந்து ஆரம்பித்துள்ள Canadian Business Resilience Network என்ற புதிய முயற்சியையும் பிரதம மந்திரி ட்ரூடோ நினைவுபடுத்தினார். இந்தக் கடுமையான காலத்தைச் சமாளிப்பதற்கும், நெருக்கடி முடிவடைந்ததும் பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கும் இந்த முயற்சி அனைத்து அளவுகளையும் உடைய வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்கும்.

அனைத்துக் கனேடியர்களும் அவர்களது அன்புக்குரியோரையும், முன்வரிசைப் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பிரதம மந்திரி மீண்டும் கேட்டுக் கொண்டார். 16 பேர் மரணமான ஹம்போல்ட் புறொங்கோஸ் (Humboldt Broncos) வாகன விபத்தின் இரண்டாவது ஆண்டை நினைவுகூர்ந்த அவர், கனேடியர்கள் மாறும் நிலைமைகளை எதிர்கொள்ளக் கூடியோரெனவும், பலமானவர்களெனவும், இருள் சூழ்ந்த நிலையில் இருந்து மீள்வதற்கு ஒற்றுமையாக இருப்பார்களெனவும் நினைவுபடுத்தினார்.

இதனை தொடர்ந்து மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய வருவாய்த்துறை அமைச்சர் டியானே லெபோதிலளிர் (Diane Lebouthillier) இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமான கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களுக்கு பிற்பகல் 3 மணிவரையில் 3.18 மில்லியன் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள், சராசரியாக நிமிடத்திற்கு 1,000 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.