யாழில் கொரோனா தொற்றிய மூவரும் ஒரே குடும்பம்
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – பலாலி தனிமை மையத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோரே என தெரிவிக்கப்பட்டள்ளது.
மேற்படி மூவரும் அரியாலை முள்ளி வீதியைச் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயதான தாயார், 20 வயதான மகன் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே தொற்றிற்கு இலக்காகியுள்ளனர் என தெரியவருகிறது.
குறித்த மூவரும் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டனர்.