Dezember 3, 2024

சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டவர்கள் பதுங்கியுள்ளனர்?

சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் அரியாலை தேவாலயத்தின் ஆராதனைகளில் கலந்து கொண்ட பலர் தொடர்ந்தும் மறைந்து மக்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறு மறைந்துள்ளவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மீண்டும் அவசர அறிவிப்பினை விடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற பூசை ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் தற்பொழுது சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.குறித்த பூசை ஆராதனையில் கலந்துகொண்டு தங்களை இனங்காட்டாது மறைந்து இருப்பவர்களும் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.