என் 11 குழந்தைகளுக்கும் கொரோனா… ஒட்டு மொத்த குடும்பத்தையும் முடக்கிய துயரம்!
ஸ்பெயினில் 11 குழந்தைகள் உட்பட மொத்த குடும்பமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள Valladolid-ஐ சேர்ந்த தம்பதி Cebrian Gervas- Irene Gervas. இந்த தம்பதிக்கு 11 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தாயான Irene Gervas-க்கு கொரோனாவுக்கான சோதனையில் நேர்மறை முடிவுகள் வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதன் பின் அனைவருக்கும் நடத்தப்பட்ட சோதனையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால், இவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, இது மிகப் பெரிய பரவலை ஏற்படுத்தலாம் என்று வீட்டின் உள்ளே கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து வீட்டின் தலைவரும், தந்தையுமான Jose Maria Cebrian கூறுகையில், குழந்தைகள் ஒவ்வொருவராக உடல் நிலை சரியில்லாமல் ஆனார்கள், அதில் ஒரு சிலர் நன்றாக இருந்தார்கள். ஒரு சிலர் மிகவும் மோசமாக இருந்தார்கள்.
அதன் பின் ஐந்து ஆறு நாட்கள் கழித்து அவர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவருக்கு, கார்மென் (15), பெர்னாண்டோ (14), லூயிஸ் (12), ஜுவான் பப்லோ (11), இரட்டையர்கள் மிகுவல் மற்றும் மானுவல் (10), ஆல்வாரோ (8), ஐரீன் (5), அலிசியா (4), ஹெலினா (3), மற்றும் ஜோஸ் மரியா (1) என 11 குழந்தைகள், இவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை.
எங்கள் விஷயத்தில், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு தலைவலி இருக்கிறது, அவர்கள் வாந்தியெடுக்கிறார்கள், வாந்தியெடுத்த பிறகு, அவர்கள் நன்றாக உணர்வதாகவும், அதன் பின் மறுநாள் மோசமான நிலைக்கு சென்றுவிடுவதாக கூறியுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா இருப்பதால், இது மற்றவர்களுக்கு எளிதில் பரவலாம் என்பதால், கடுமையான பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறோம்.
எங்களிடம் உள்ள வைரஸ் சுமை காரணமாக ஒரு முழுமையான பூட்டுதலில் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு வாரங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர் எங்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தற்போது இருக்கும் இந்த சூழ்நிலையைச் சமாளிக்க குடும்பம் உறவினர்களையும் அவர்களது 14 வயது மகனையும் அவர்கள் நம்பியுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஏனெனில் அந்த 14 வயது மகன் தான் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார், அதுவும் அவர் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.