November 21, 2024

தமிழகத்தில் படை எடுக்கும் கொரோன! 411 ஆக அதிகரித்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளார். அதில அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,10,538 ஆகும். தனிமை வார்டுகளில் 23,689 பேர் உள்ளனர். வென்டிலேட்டர்கள் உதவியுடன் 3,396 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தற்போதைய சேர்க்கை 1,580 ஆகும்.

ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,684, அவர்களில் 411 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. 7 பேர் குணமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தோர் விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் அதிகபட்சமாக 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஈரோடு (32), மூன்றாம் இடத்தில் திருநெல்வேலி(36) மாவட்டம் உள்ளது.

அதேபோன்று, கோவையில் 29 பேரும், தேனி மற்றும் நாமக்கலில் தலா 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களின் விவரம் வருமாறு: