யாழில் இன்று முதல் கொரோனா பரிசோதனை!
கொரோனோ தொற்று பரிசோதனைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனோ தொற்று பரிசோதனைகள் கடந்த புதன்கிழமை முதல் யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று முதல் இந்தப் பரிசோதனைகள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தல் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனோ தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அந்தப் போதகருடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பத்துப் பேருக்கு மேற்கொண்ட கொரோனோ பரிசொதனைகளில் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் ஏனைய பத்துப் பேருக்கும் நேற்று கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் இன்று வெளி வரும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்; ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.