சுனாமி பேரவலம்:19வது ஆண்டு நினைவேந்தல்!
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டில் சுனாமி பேரவலத்தினால்; 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலியும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில்,முல்லைதீவின் கள்ளப்பாட்டினில் மற்றும் மன்னார் மட்டக்களப்பு திருகோணமலையென பகுதிகளில் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.