சுனாமி பேரலை:இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
சுனாமி பேரலை அவலத்தில் மரணித்தோரை நினைவுகூர நாளை செவ்வாய்கிழமை தமிழர் தாயத்தில் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே நாளை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாளை 2004 சுனாமியின் 19 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும்,இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வடகிழக்கின் தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுனாமி பேரவலத்தில் காவு கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.