Oktober 16, 2024

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இன்றையதினம் (9) நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல உத்தரவிட்டது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகளை தொடரப்பட்டிருந்தது.

அது தொடர்பில் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ம் திகதி உத்தரவிட்ட நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert