September 28, 2024

சிங்கள தலைவர்களை தேர்தலில் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்கு உள்ள முக்கிய தெரிவு

இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை  காணப்படுகின்றது. என சமூக அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்ட முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மக்கள் போராட்ட முன்னணிக்கு  வடகிழக்கு மக்கள் போராட்ட  ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மிக நீண்டகாலமாக 25 வருடங்களிற்கு மேலாக தமிழர்கள் தங்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுதொடர்பிலும்  தங்களிற்கு எதிராக தொடர்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைக்கு எதிராக தீர்வு  தொடர்பாகவும்  சிங்கள பேரினவாத அரசுகளோடு பேசி போராடி உயிர்களை இழந்து இறுதியாக ஒரு பெரும் விரக்திமனோநிலையை அடைந்துள்ளனர்.

இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை தான் காணப்படுகின்றது.

ஏனென்றால் தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கோரிக்கைகள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாமல் வெறுமனே மீண்டும் ஒற்றையாட்சிக்குள் ஒரு மூன்றாம்தர இனமாக வடகிழக்கு மக்கள் நடத்தப்படவேண்டும் என்ற அதேசிந்தனையோடு பலர் தங்கள் அரசியல் விஞ்ஞாபனங்களை தயார் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

மறுபக்கத்தில் சிங்கள தலைவர்கள் தென்னிலங்கையில் ஒன்றைகூறிவிட்டு வடகிழக்கில் வந்து அதிகாரபரவலாக்கம் தொடர்பான நாடகங்களை ஆடுவது இன்றுவரை தொடர்கின்றது.

மக்கள் போராட்ட முன்னணிக்கான களத்தை உருவாக்கும்போது என்னுடைய சிங்கள நண்பர்களிற்கு மிகத்தெளிவாக கூறிய விடயம் இதுதான்- முன்னர் செய்தது போல ஏனைய தலைவர்கள் செய்தது போல நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்ற முடியாது என்பதே.

நாம் எமது விடயங்களை தெளிவாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறுவதோடு மாத்திரமல்லாமல் சிங்கள மக்களிற்கு அரசியல் அதிகாரபரவலாக்கம் தொடர்பான மிகத்தெளிவான விடயங்களை முன்வைக்கவேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்துள்ளேன்.

அந்த அடிப்படையில் சுயாட்சியுடன் கூடிய தன்னாட்சி அதிகாரம்மிக்க அலகுகளை சுய ஆட்சியொன்றை ஏற்படுத்தும் அலகுகளை உருவாக்குவதற்கான அடிப்படை வரைபுதிட்டம் முன்மொழியப்பட்டுள்ளது

அது மாத்திரமின்றி ஒற்றையாட்சி முறை முற்றாக நீக்கப்பட்டு இந்த நாட்டில் எண்ணிக்கை அடிப்படையில் குறைவாகயிருக்ககூடிய மற்றைய இனங்கள் அரசியல் அதிகாரமொன்றை பெறும்வகையில் நாடாளுமன்றத்திற்கு சமமான அதிகாரம் உள்ள சபைகள் உருவாக்கப்பட்டு பௌத்தசிங்கள பேரினவாதத்தால் உருவாக்கப்படுகின்ற  நாடாளுமன்றத்தினால் அவர்களை  நசுக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் சார்பாக முடிவெடுக்க முடியாது என்ற அடிப்படையில் அதிகாரங்கள் மீளப்பெறமுடியாத ஒரு தீர்வுதிட்டம்முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் ஒருமொழிக்கான முன்னுரிமை ஏனைய மொழிகளை புறக்கணித்தல் போன்ற விடயங்கள் குறித்த சரியான திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் அமைப்பிலே கூறப்பட்டுள்ள ஒரு மதத்திற்கான முன்னுரிமை என்பது  நீக்கப்படவேண்டும். அனைத்து மதங்களிற்குமான சம உரிமை மற்றும்  மதங்கள் அரசியல் தலையீடு செய்யக்கூடாது என்பவற்றை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

அதுமட்டுமின்றி யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளான காணாமல் ஆக்கபட்டோர்இயுத்தக்குற்றங்கள் யுத்தத்தால் உயிரிழந்தவர்கள் அவர்களிற்கான பொறுப்புக்கூறல் ஏற்கனவே விட்ட பிழைகளை ஏற்றுக்கொள்ளுதல் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை முன்வைத்தல்அந்த தீர்வை தொடர்ந்து எங்களை அடுத்த கட்ட நிலைக்கு முன்னோக்கி கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் மிகவும் தீர்க்கமாக ஆராயப்பட்டு எழுத்துவடிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாங்கள் மிகநீண்டகாலமாக கேட்டுக்கொண்டிருந்த மிக முக்கியமான விடயங்களிற்கு மிகவும் காத்திரமான பதில்கள்இநாங்கள் முன்னோக்கி செல்லக்கூடிய அணிகள் எங்களுடன் இணைந்திருக்கின்றன.

ஒரு வடக்குகிழக்கு தமிழர் என்ற அடிப்படையில் இந்த கூட்டணியின் மேல் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.

ஏற்கனவே நாங்கள் பல தரப்பட்ட ஏமாற்றங்களை சந்தித்திருந்தாலும் நான் மிக நீண்டகாலம் இவர்களுடன் இணைந்து செயற்படுகின்றேன்எங்களுடைய பிரச்சினைகளை இவர்கள் நன்கறிவார்கள்சரியான பாதையில் தமிழ் மக்களை ஏமாற்றாமல் இவர்கள் பயணிப்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

இந்த நாடு முன்னேற சரியான ஒரு அதிகாரபரவலாக்கலை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் அது குறித்து இன்னமும் நாங்கள் பேசுவோம்வடகிழக்கு தமிழர்களுடன் நீண்ட உரையாடல்களி;ற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

இந்த நாடு முன்னேற சரியான ஒரு அதிகாரபரவலாக்கலை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் அது குறித்து  இன்னமும் நாங்கள் பேசுவோம்வடகிழக்கு தமிழர்களுடன் நீண்ட உரையாடல்களி;ற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert