Juni 29, 2024

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக  ஸ்மார்ட் வகுப்பறை  திறப்பு விழாவில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் தான் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என மேலும் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert