Juni 29, 2024

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (3) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert