April 26, 2024

ஒருவருக்கு ஏன் ஓய்வு அவசியம்.மருத்துவர் சத்தியமூர்த்தி

சுகதேகியாக இருத்தல்.
ஒருவருக்கு ஏன் ஓய்வு அவசியம்.
………………………………………………………
ஒருவரின் வாழ்க்கையில் அமைதியும் ஆறுதலும் மிகவும் முக்கியமானது. அதனை எவ்வாறு ஒருவர் அனுபவிக்க முடியும் ?
அதனை அவர் இருக்கின்ற எந்த சூழ்நிலையிலும் அனுபவிக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒருவர் உடல் உள ஓய்வை அனுபவிப்பதன் மூலம் உண்மையான ஆரோக்கியத்தை பெற முடியும்.
ஓய்வு என்பது,தொடர்ச்சியான செயலில் இருந்து சிறிது நேரம் அல்லது சிலகாலம் விடுபடுவது. மாற்றுச் செயலில் ஈடுபடுவதும் ஓய்வுதான். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒய்விற்குப்பின் செய்யும் செயல்கள் அதிக பலனை அளிக்கிறது.
வேலைகளுக்கு அப்பால் ஓய்வு கிடைக்கும் போது நாம் சிலவேளைகளில் உள ஓய்வை அனுபவிக்க மாட்டோம். நாம் உள ஓய்வை கிரமமாக எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் நாம் ஓய்வு நேரத்தில் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் செலவிட்டு முடிவில் தேவையற்ற தகவல்களை பெற்று எமது அமைதியை இழந்து விடுகின்றோம்.
அதுமட்டுமின்றி நாம் எமது சிந்தனைகளை எல்லைகளை கடந்த விடயங்களில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே ஓய்வின் போது உடலிற்கு பயிற்சியை எடுத்தாலும் உள்ளத்திற்கு அமைதியை எடுத்துக் கொள்வோம்.