April 27, 2024

அரங்கமும் அதிர்வும் G.T.V ஆரம்பித்து பல தளங்களில் 60க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நடத்திவரும் கணேஷ் சின்னராசா அவர்களுக்கு 02.05.21 பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

 

.பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகிறேன். நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்க பல்லாண்டு.

இனி கணேஷ் சின்னராசா அவர்கள் பற்றிய மினிப்பார்வை……
தாயகத்தில் அவரது 18வது வயதில் கலைக்குள் பிரவேசித்தவர்.
அக்காலத்தில் இருந்து புகலிடம் வரும்வரை
கலையில் பல தளங்களில் தடம் பதித்தவர்.
பிரான்ஸ் வந்த பின்னர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக புனித அந்தோனியார் முத்தமிழ் கலாமன்றத்தின் முதன்மை செயற்ப்பாட்டாளர்.
இம் மன்றத்தின் ஊடாக கலைநிகழ்வுகளையும் நடத்தி வருவதோடு கலைஞர்களையும் கௌரவித்து வருகிறார்.
கூத்து கலையை மேம்படுத்தும் வகையில் 10 க்கு மேற்பட்ட நாடகக் குழுக்களின் கூத்து நாடகங்களை ஓரே நாளில் மேடையேற்றி வெற்றி கண்டவர். பாரம்பரிய கூத்துக்கலையின் பாதுகாவலர் என்று மூத்த கலைஞர்களால் பாராட்டுப் பெற்றவர் கணேஷ் சின்னராசா அவர்கள்.
மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க மற்றும் பாரிஸ் கலைஞர்களையும் இணைத்து பண்டாரவன்னியன் சரித்திர நாடகத்தை எழுதி இயக்கி ரசிகர்களின் நல்வாழ்த்துக்களை பெற்றதோடு பங்கு பற்றிய கலைஞர்களையும் தனது நெறியாள்கையில் சிறப்புற பாராட்டு பெறும் வகையில் நடிக்க வைத்து அகமகிழ்ந்தவர்.
பத்துக்கு மேற்பட்ட பெண்கள் நடிக்க „மரம் சொல்லும் கதை“என்ற கவிதை நாடகத்தை எழுதி இயக்கி ரசிகர்கள் மற்றும் கலைநோக்கர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கி.தீபனின் வஞ்சனம் என்ற குறும்படத்தில் என்னுடன் இணைந்து மிகவும் அட்டகாசமாக நடித்தார். அந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு இவருக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்தது. அதன் வழி திரையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.
G.T.V.தொலைக்காட்சியில் இவரால் வடிவமைக்கப்பட்டு ஆரம்பிக்கபட்ட அரங்கமும் அதிர்வும் விவாத நிகழ்ச்சி
இவரே இயக்குநராகவும் நிகழ்ச்சி நடத்துவதாகவும் இது வரை
60க்கு மேற்பட்ட தலைப்புகளில் தொடர்ந்தும் நடத்தி வருகிறார்.
இந்நிகழ்வில் ஆரம்ப காலங்களில் இருந்து நானும் இயங்கிவருகிறேன். இவரது இவ் நிகழ்ச்சி பல பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது என்பது இவரது தனிச்சிறப்பு.
மேடைகளிலும் தற்போது ஜெர்மன் S.T.S.தொலைக்காட்சியிலும் இவ் நிகழ்ச்சி இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தாயகத்தில் வாழும் இவரது சகோதரர் யூல்ஸ் கொலின் அவர்கள் 40ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணி ஆற்றிவரும்
மிகவும் நாடறிந்த, பல விருதுகள் பெற்ற மாபெரும் கலைஞர். அத்தோடு
யாழ் திருமறைக்கலாமன்றத்தின் மூத்த கலைஞர்.
கணேஷ் சின்னராசா அவர்கள் கவிதை, கட்டுரை,கதை, எழுதுவதிலும் வல்லவர்.
தாயகத்திலிருந்து அதிசியன் என்ற புனைபெயரிலே இவைகளை அதிகம்எழுதிவருகிறார்.
அதுமட்டுமல்லாமல் மேடை நிகழ்ச்சிகளையும் தனக்கேயுரிய பாணியில் சிறப்புற தொகுத்து வழங்குபவராகவும் மிளிரும் இவர். பாரிஸில் வாழும் அனைத்து கலைஞர்களுடனும் நட்பை பேணி வருபவர்.
இப்படி இன்னும் சொல்ல நிறையுள்ள கலைஞர் கணேஷ் சின்னராசா அவர்கள் 02.05.21.இன்று தனது புதிய அகவையில் காலடியெடுத்து வைக்கிறார்.
அவரை பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.

அனைத்து செல்வங்களுடனும் வாழ்க பல்லாண்டு இறையருள் நிறைந்த

வாழ்த்துக்கள்

.

K.P.L. 02.05.21
„கலையால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்“
பாரிஸ் பாலம் படைப்பகம் (பிரான்ஸ்)