Mai 21, 2024

டென்மார்க்கைத் மீண்டும் திறக்க உதவும் கொரோனா கடவுச்சீட்டு

டென்மார்க்கில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்குவதில் ஒரு பொிய அடியை எடுத்து வைத்துள்ளது. உணவகங்கள், மது அருந்தகங்கள், அருட்காட்சியங்கள், கால்பந்து அரங்கங்களுக்கு மக்கள் அனுமதிக்கபடவுள்ளனர்.கொரோனா கடவுச்சீட்டு (corona passport / coronapass) காண்பிப்பதன் மூலம் தொற்று இல்லை என்பதை நீரூபிக்க வேண்டும். இது திறன்பேசியில் காண்பிக்க முடியும். கடந்த 72 மணி நேரத்திற்குள் எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்றிருக்கிறீர்களா? தடுப்பூசி சான்றிதழ் அல்லது இரண்டு முதல் 12 வாரங்களுக்கு முன்னர் முந்தைய தொற்றுநோய்க்கான ஆதாரம் ஆகியவற்றைக் காட்டுகிறது. தேவை ஏற்பட்டால் காகித வடிவிலும் கடவுச்சீட்டு இருக்க முடியும்.

இலத்திரனியல் சான்றிதழ்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வோர் காண்பிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூன் இறுதிக்குள் அனைத்து 27 உறுப்பு நாடுகளிலும் அதன் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.